திருநெல்வேலி மாவட்ட செய்திகள்
\n
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடத்தப்பட்டு இன்று காலை அவரது தோட்டத்தில் கொலை செய்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
\n
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயக்குமார் தனசிங் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்,
\n
\n
\n
\n
\n
Tirunelveli District News Today
\n
குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், பாதுகாப்பு கேட்டும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையை கண்டித்தும் நாகப்பட்டினம் கோட்டை வாசல் பகுதியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
\n
இதனால் நாகை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
\n
ALSO READ | தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன் சத்திரம் வருகே கத்தி முனையில் வழிப்பறி.
\n
\n
\n
இதில் பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
\n
சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
\n
\n
\n

\n