Saturday, December 6, 2025
Homeகோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி : தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலையிலுள்ள...

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி : தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலையிலுள்ள இருவரது வீடுகளில் நாகை போலீசார் சோதனை

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\r\n\r\nகோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சதேகத்திற்குறிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.\r\n\r\nஅதன்படி தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலுவையில் உள்ள அசன்அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான 10 க்கும் மேற்பட்ட போலீசார் இருவரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். \r\n\r\nசுமார் ஒருமணிநேரம் காவல் துறையினர் நடத்திய ஆய்வில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்க நிலையில்,விசாரணையை முடித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர்.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரது வீடுகளில்\r\nபோலீசார் சோதனை மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\r\n\r\nநாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments