திருநெல்வேலியில் உள்ள, மத்திய அரசு நிறுவனங்களான ” கள விளம்பர அலுவலகம்” மற்றும் ” நேரு இளையோர் மையம்” (NEHRU YUVA KENDRA) ஆகியவற்றுடன் இணைந்து, நூற்றாண்டு காணுகின்ற, பாளையங்கோட்டை “தூய சவேரியார் கலை- அறிவியல் தன்னாட்சி கல்லூரி” மாணவ, மாணவிகள், இன்று (அக்டோபர்.27) காலையில், தூய்மை இந்தியா 2.0″ பற்றிய, “விழிப்புணர்வு பேரணி” ஒன்றை, பாளையங்கோட்டையில் நடத்தினர். \r\n\r\nஇங்குள்ள வ.உ.சி.திடல் முன்பிருந்து துவங்கிய இந்த பேரணி, எல்.ஐ.சி.அலுவலகம், பாளை பழைய பேருந்து நிலையம், ஆல் இண்டியா ரேடியோ, மாவட்ட மத்திய நூலகம் ஆகியவற்றின் வழியாக, தூய சவேரியார் கல்லூரியை, வந்தடைந்தது. \r\n\r\nஇந்த விழிப்புணர்வு பேரணியை, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் வி.சிவ கிருஷ்ண மூர்த்தி, பச்சைக்கொடி அசைத்து, துவக்கி வைத்தார். பேரணி முடிவடைந்த இடத்தில், “தூய்மை இந்தியா 2.0” தொடர்பான, “சிறப்புக்கருத்தரங்கம்” ஒன்றும், நடைபெற்றது. :கல்லூரி முதல்வர்” முனைவர் மரிய தாஸ், “தலைமை” வகித்தார். \r\n\r\nதிருநெல்வேலி கள விளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப், கள விளம்பர உதவி அலுவலர் ப.வேல் முருகன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஞானச்சந்திரன், தூய சவேரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட (NSS) அலுவலர் டேவிட் அப்பாத்துரை ஆகியோர், “விளக்கவுரை” நிகழ்த்தினர். \r\n\r\nதூய்மை இந்தியா 2.0 விழிப்புணர்வு பற்றிய, சுவரொட்டி (WALL POSTER) போட்டி, நடத்தப்பட்டு, “பரிசுகள்” வழங்கப்பட்டன. “கண்காட்சி” ஒன்றும் நடத்தப்பட்டது. வில்லுப்பாட்டு மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ” “தூய்மை பணியாளர்கள்” கவுரவிக்கப்பட்டனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
