Thursday, December 18, 2025
Homeதேசிய நெடுஞ்சாலையில் சின்னையன் சத்திரம் வருகே கத்தி முனையில் வழிப்பறி.

தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன் சத்திரம் வருகே கத்தி முனையில் வழிப்பறி.

ஆந்திர பிரதேசம் , சித்தூர் மாவட்டம் தவனம்பள்ளி தாலுக்காவை சேர்ந்தவர் திலீப் குமார். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகேந்திரா என்ற நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

\n

இவர் கடந்த 27.04.2024 அன்று மாலை ஆந்திராவிலிருந்து கிளம்பி சோழிங்கநல்லூர் செல்லும் வழியில் இரவு சுமார் 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை சின்னையன் சத்திரம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக சர்வீஸ் சாலையில் வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

\n

அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி , திலிப்குமாரின் உயர்ரக யமஹா வாகனம் , லேப்டாப் இரண்டு அடங்கிய பை மற்றும் செல்போன் ஆகியவற்றை மிரட்டி வழிப்பறி செய்து கொண்டு தப்பினர். 

\n

 

\n

இதுகுறித்து திலீப் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி நபர்களை அடையாளம் கண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

\n

\n

இதில் கோனேரிகுப்பம் சுடுகாடு பகுதியில் அந்த மர்ம நபர்கள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தாலுகா போலீசார், கோனேரி குப்பம் சுடுகாடு பகுதிக்கு சென்று மர்ம நபர்களை பிடிக்க முற்பட்டனர். போலீசாரை கண்டவுடன் மர்மநபர்கள் தப்பி ஓடும் போது தவறி கீழே விழுந்த இருவரின் கைகள் உடைந்தது. அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

\n

காவல்துறையினரின் விசாரணையில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய கோனேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 20, ரங்கா வயது 22, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது கூட்டாளி அரவிந்த் வயது 22, ஆகிய மூவரும் சேர்ந்து திலீப் குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

\n

\n

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த 2 லேப்டாப்கள், செல்போன், மோட்டார் சைக்கிள், மற்றும் மற்றும் மிரட்டலுக்கு பயன்படுத்திய இரண்டு பட்டாக்கத்திகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

\n

பின்னர் மூன்று பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments