Friday, December 19, 2025
Homeகல்வராயன்மலையில் முதல் கட்டமாக BSNL 4G அலைவரிசை !!!

கல்வராயன்மலையில் முதல் கட்டமாக BSNL 4G அலைவரிசை !!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் தொலை தொடர்பு இணைப்பு வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

\n

அதனடிப்படையில் கல்வராயன்மலையில் பி.எஸ்.என்.எல்., 4ஜி அலைவரிசை டவர்கள் 29 இடங்களில் அமைக்க திட்டமிட்டு, கடலுார் தொலைதொடர்பு அலுவலகம் மூலம் நிறுவப்பட்டு வருகிறது.

\n

முதல் கட்டமாக 9 டவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

\n

\n

ஆலனுார் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைவர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி அலைபேசி கோபுரங்களை துவக்கி பேசுகையில் :

\n

‘மலைப் பகுதியில் பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவைக்கான கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு சிறப்பு தாசில்தார் நியமிக்கப்பட்டு தகுந்த இடங்கள் சர்வே செய்யப்பட்டது. தொடர்ந்து தாமதமின்றி நிலங்கள் வழங்கப்பட்டது.

\n

அதேபோல் பைபர் கேபிள்களை சாலை வழியாக நிறுவ நெடுஞ்சாலைத்துறை ஒப்புதலும், மின்சார வாரியத்திடம் மின் இணைப்பும் துரிதமாக வழங்கப்பட்டது. வனப்பகுதியில் ஓ.எப்.சி., கேபிளை நிறுவ வனத்துறையின் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டது.

\n

\n

மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் தற்போது 9 டவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள அலைபேசி கோபுரங்கள் படிப்படியாக கொண்டு வரப்படும்.

\n

இணையதள இணைப்பினை மலைவாழ் இளைஞர்கள் கல்வி, அவசர மருத்துவ உதவி போன்ற பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். தங்களது குழந்தைகள் அலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்’ என்றார்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments