Saturday, December 6, 2025
Homeபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணி முக்கிய வீதி வழியாக கும்பகோணத்தில் ஊர்வலம்.

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணி முக்கிய வீதி வழியாக கும்பகோணத்தில் ஊர்வலம்.

கும்பகோணத்தில் ஐபிஎல் செந்தில் நர்சிங் ஹோம் இன்னர் வீல் கிளப் இன்னர்வீல் டெல்டா கிளப் சார்பில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணி மகாமகம் குளத்திலிருந்து முக்கிய வீதி வழியாக நகர மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக சென்றது.\r\n\r\nஇந்தப் பேரணியை இன்னர் வீல் கிளப் மாவட்ட பொருளாளர் செல்வி இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானதாக தற்போது திகழ்வது மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோயாகும், \r\n\r\nஇதனை ஆரம்ப கால கட்டத்திலேயே கட்டறிந்து விட்டால் அந்நோயில் இருந்து முழுமையாக காப்பற்றிவிட முடியும், பெண்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலோ, புற்றுநோயின் அறிகுறி தென்பட்டாலோ, உடனடியாக அருகாமையில் உள்ள பெண் மருத்துவரை நாடி உரிய எளிய தொடக்க நிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பு பெண்களிடமும் ஏற்படுத்திட இந்த விழிப்புணர்வு நடைபெற்றது. \r\n\r\nபேரணியில்,அரசினர் மகளிர் கல்லூரியிலிருந்து 100க்கும் மேற்பட்ட யூத் ரெட் கிராஸ் மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவர்கள் நெடுஞ்செழியன் மீனாட்சி ஜெயக்குமார் பிரபா செந்தில் நர்சிங் ஹோம் ஒருங்கிணைப்பாளர் கயல்விழி இன்னர்வீல் கிளப் தலைவர் வசந்தி செயலாளர் விஜயா பொருளாளர் சிவகாமி \r\n\r\nடெல்டா இன்னர் வீல் கிளப் தலைவர் பிஸ்மில்லா பேகம் செயலாளர் மணிமேகலை ராஜேந்திரன் பொருளாளர் இந்திராணி கிருஷ்ணன் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அசோகன் வைத்தியநாதன் வழக்கறிஞர் வைத்தியநாதன் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் என பலரும் விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியபடி, கரங்களில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments