26.10.22 , திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது, சாலையில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழி விட தவறினால் 10 ஆயிரம் அபராதம் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டால் ஐந்தாயிரம் அபராதம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 அபராதம் , \r\n\r\nபதிவு இல்லாத வாகனங்கள் ஓட்டினால் 2500 ரூபாய் அபராதம் காப்பீடு இல்லாமல் ஓட்டினால் 2000 அபராதம் உள்ளிட்ட விதிகள் அமலுக்கு வந்த நேற்று ஒரே நாளில் தஞ்சை மாநகரில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நேரடியாக 3800 ரூபாயும் மேலும் இணையதள மூலம் அபராதம் கட்டுவதற்காக அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. \r\n\r\nஇந்த விதிமுறைகள் பொது மக்களுக்கு இன்னும் சரியாக சென்றடையாததால் தஞ்சாவூர் அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் செல்போன் பேசிக்கொண்டு வரும் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரை நிறுத்தி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தையும் அபராத விவரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துக் கூறி எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.\r\n\r\nதஞ்சாவூர் செய்தியாளர் ஆர்.ஜெயச்சந்திரன்.
