Saturday, December 6, 2025
HomeUncategorizedகுன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி?

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி?

\r\nகுன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும்விமானப் படைஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானதில்7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\r\n\r\nவெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.\r\n\r\nவிபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத்தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி நரவணேஆகியோரும்இருந்ததாகக் கூறப்படுகிறது.\r\n\r\nஉடனடியாக உயிரிழப்பு பற்றி எதுவும் உறுதி செய்ய இயலவில்லை.\r\n\r\nநஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.\r\n\r\nவிபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.\r\n\r\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments