நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. \r\n\r\nகூத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எல்.இராஜகோபால், வி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\r\n\r\n\r\nஇக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று தங்களது துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ஹெச்.ஜீனத்நிஷா வரவேற்புரை வழங்கினார்.\r\n \r\nஆத்மா குழு தலைவர் பா.கோவிந்தராஜன், ஆத்மா குழு உறுப்பினர் க.பழனியப்பன்,மாவட்ட நலக்கல்வி அலுவலர் மாலன் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோகுலநாதன், சுகாதார மேற்பார்வையாளர் என்.தியாகராஜன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். இறுதியாக ஊராட்சி செயலர் எஸ்.சுல்தானுல் ஆரிப் நன்றியுரை கூறினார்.\r\n\r\nநாகை மாவட்ட செய்தியாளர் சீனிவாசன்.
