இன்று இந்தியா முழுவதும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் திரைப்பட நடிகர் அஜித்தின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
\n
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித் ரசிகரான காளிதாஸ் என்பவர் தான் நடத்திவரும் வீரம் ரெஸ்டாரன்ட் என்ற கடை மூலம் அஜித்தின் பிறந்த நாளை வித்தியாசமான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றார்.
\n
\n
\n
\n
\n
இதேபோன்று இந்த ஆண்டு திரைப்பட நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மற்றும் மே தினத்தை முன்னிட்டு தனது கடைக்கு வரும் அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு டீ மற்றும் ஒரு ரூபாய்க்கு பிரியாணியை வழங்கி வருகிறார்.
\n
மேலும் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கியும் திரைப்பட நடிகர் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடினார்.
\n
ALSO READ | இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து, காசாவிற்கு கூடுதல் உதவிகளை செய்ய பிளிங்கன் வலியுறுத்தினார்.
\n
\n
\n
இதனைத் தொடர்ந்து அஜித்தின் உருவம் பொறிக்கப்பட்ட கேக்கை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்பு கேக்வெட்டி அனைவருக்கும் கேக்கினை வழங்கினார்.
\n
மேலும் வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலையில் செல்லும் நபர்களுக்கு இலவசமாக தர்பூசணி பழம் மற்றும் மோர் போன்றவைகளும் வழங்கி வருகிறார்.
\n
\n
\n

\n