Tuesday, December 16, 2025
Homeநீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்து திரும்பிய சுற்றுலா பேருந்து கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் பயங்கர...

நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்து திரும்பிய சுற்றுலா பேருந்து கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் பயங்கர விபத்து.

சென்னை பெரம்பூரில் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தனியார் பேருந்து மூலம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வந்துள்ளனர். 

\n

இன்ப சுற்றுலா முடித்துவிட்டு இன்று இரவு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனை பகுதியின் அருகே பேருந்து வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 100அடிக்கு மேல் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

\n

\n

இந்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

\n

தற்பொழுது காயம் அடைந்தவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

\n

\n

விபத்தில் காயம் அடைந்தவர்களை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ,கே, செல்வராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

\n

மேலும் காயம் அடைந்தவர்கள் சிலரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments