Thursday, December 18, 2025
Homeதிருவாரூர் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி

திருவாரூர் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில் வேளாங்கண்ணியிலிருந்து கரூர் நோக்கி சென்ற கார் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து இதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்தது.

\n

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விபத்து குறித்து நேரில் விசாரனை மேற்கொண்டார்

\n

\n

காரில் வந்த கரூர் மாவட்டம் தோட்டகுறிச்சியை சேர்ந்த மலையப்பசாமி 44 என்பவர் காரை ஓட்டியுள்ளார் காரில் வந்த பழனியம்மாள் என்கிற மூதாட்டி சம்பவ இடத்திலேயே விபத்தில் பலியானார்

\n

மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் சேர்ந்த ராஜ் 56 இவர் தஞ்சாவூர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவரும் சம்பவ இடத்திலேயே சாலை ஓரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் .

\n

உடனடியாக கொரடாச்சேரி போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments