புலிக்காட்டு பகுதியை அடுத்து தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஈரநிலமான விழுப்புரம் மாவட்டத்தின் \r\n மரக்காணம் மற்றும் வானூர் பகுதியில் வண்டிப்பாளையம், கூனிமேடு, கொழுவாரி, காளியாங்குப்பம், தேவிகுளம் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. \r\n\r\nஇந்த கிராமங்களுக்கு மத்தியில் 13 ஆயிரம் ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதியாக அமைந்துள்ளது கழுவெளி எனப்படும் பக்கிங்காம் கால்வாய். இந்த கால்வாய் மரக்காணத்தில் ஆரம்பித்து சென்னை உள்ளிட்ட வழியாக பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் முடிவடைகிறது. \r\n\r\nமரக்காணம் பகுதியில் இந்த சதுப்பு நிலப்பகுதியைச் சுற்றி 720 ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளது. இந்த கழுவெளி பகுதியில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால் இதில் அதிகளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவைகளும் வளர்கிறது. இந்த கழுவெளி பகுதியில் நிறைந்து இருக்கும் தண்ணீரால் கடல் நீரும் உட்புகாதவாறு பாதுகாக்கப் படுகிறது. இதனால் இப்பகுதியில் விவசாயமும் செழிப்பாக நடைபெற்று வருகிறது. \r\n\r\nஇங்கு இயற்கையாக அமைந்துள்ள கழுவெளி மற்றும் நீர் நிலைகளைத் தேடி சீனா, இலங்கை, பாகிஸ்தான், ரஷியா போன்ற வெளி நாடுகளில் இருந்து கூழக்கடா, சென்ணாறை, பாம்பு கழுத்து நாறை, சாம்பல் நாறை உள்ளிட்ட பல் வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இங்கு வருகிறது. \r\n\r\nஇந்த பறைகள் இங்கு மூன்று மாதத்திற்கு மேல் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கமும் செய்கிறது. இவைகள் பருவ நிலை மாறியவுடன் மீண்டும் தங்களது நாடுகளுக்கு சென்று விடுகிறது.\r\n\r\n இங்கு வந்து குவியும் பறவைகளை பாதுகாக்க பறவைகள் சரணாலயம் அமைக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். \r\n\r\nஇந்நிலையில் மரக்காணம் பகுதியில் உள்ள கழுவெளி சதுப்பு நிலப்பகுதியில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்வைகள் சரணாலயம் அமைக்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமிழக முதல் அமைச்சர்க்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.\r\n\r\n\r\nஇப்பகுதி மக்கள் கூனிமேடு பகுதியில் பறவை ஆராய்ச்சியாளர் பூபேஷ் குப்தா தலைமையில் கூடி கழுவெளி பகுதியில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்…\r\n
