Saturday, December 6, 2025
Homeதமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் திமுக அரசு...

தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் திமுக அரசு செய்து வரும் அரசியலை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

கும்பகோணத்தில் புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயன்று வருவதாக திமுக குற்றம் சாட்டியது. மத்திய பாஜக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.\r\n\r\nஇந்நிலையில், இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தி.மு.க நடத்தும் அரசியலை கண்டிதும், தமிழை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்று 27-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். \r\n\r\nஅதன் ஒரு பகுதியாக தமிழகத்தை ஆளும் திமுக அரசு திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறோம் என கூறிக்கொண்டு தமிழன் வளர்ச்சியை தடுப்பதுடன் தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிக்கிறது தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் மருத்துவ படிப்பு தமிழில் வேண்டும் தமிழ் மொழியை காப்போம் என பாஜக கட்சி கொடி ஏந்தி தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. \r\n\r\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் மாவட்ட துணை தலைவர் வெங்கடாச்சாரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்கள்.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments