இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா, அக்டோபர் 24 ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் வாளுக்குவேலி அம்பலம் பெருவிழா நடைபெற உள்ளது. \r\n\r\nமுக்குலத்து புலிகள் கட்சி வருடாவருடம் கலந்துகொள்ளும் இவ்விழாவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும் என அக்கட்சியினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரை ச??்தித்து இன்று மனு அளித்தனர். \r\n\r\nமுக்குலத்து புலிகள் கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் தலைமையில் வந்த அக்கட்சியினர் அக்டோபர் 30 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\r\n\r\nநாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.
