திருநெல்வேலி, அக்.27:- ஆன்மீக திருநகராம் திருவண்ணாமலையில், 36-ஆவது தமிழ்நாடு அளவிலான, “ஜூனியர் ஓப்பன் சேம்பியன்ஷிப்” தடகளப்போட்டிகள், இம்மாதம் 16-ஆம் தேதி முதல், 19-ஆம் தேதி முடிய, மொத்தம் 4 நாட்கள் நடைபெற்றது. \r\n\r\nஇதில், 20 வயதுக்கு உடபட்டவர்களுக்கான, 4 கிலோ எடையுள்ள, இரும்பு குண்டு(SHOT PUT) எறியும் போட்டியில், திருநெல்வேலியை சேர்ந்த, ஏ.விஷ்ணு என்பவர், 16.37 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து, “முதல்” இடத்தை கைப்பற்றி, “தங்கப்பதக்கம்” வென்றுள்ளார். \r\n\r\nஇதன் காரணமாக, அவர் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ஆம் தேதி முதல்,15- ஆம் தேதி முடிய, மொத்தம் 5 நாட்களுக்கு, “அஸ்ஸாம்” மாநிலத்தில் நடைபெறவுள்ள, 37-ஆவது ஜூனியர் தேசிய தடகளபோட்டிக்கு, “தேர்வு” ஆகியுள்ளார். \r\n\r\nதங்கப்பதக்கம் வென்று, திருநெல்வேலி மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ள, இளைஞர் விஷ்ணுவை, திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற பா.ஜ.க.தலைவருமான நயினார் நாகேந்திரன், இன்று (அக்டோபர்.27) அதிகாலையில்,”நேரில்” அழைத்து, வெகுவாக பாராட்டியதுடன், தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், தெரிவித்தார். \r\n\r\n”வெற்றி வீரர்” விஷ்ணுவுக்கு, சிறப்பான முறையில் பயிற்சி அளித்த, மாவட்ட விளையாட்டு அலுவலக, “தடகள பயிற்சியாளர்” முனைவர் ஆர்.சத்யா, அப்போது உடனிருந்தார்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
