திருநெல்வேலி,அக்.25:- பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாவட்ட “ஆயுதப்படை மைதானம்” வளாகத்தில், இம்மாதம் (அக்டோபர்) 19-ஆம் தேதி, பயிற்சி காவலர்களின், பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடைபெற்றது.\r\n\r\nபயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து நடைபெற்ற, காவலர்களின் பல்வேறு சாகச அணிவகுப்பில், போர்வீரர் அணிவகுப்பு (WARRIOR PARADE) நிகழ்ச்சியானது, விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களை, வெகுவாக கவர்ந்தது.\r\n\r\nபோர்வீரர் அணிவகுப்பானது, சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, மாவட்ட மக்களின் பாராட்டுக்களை பெற்றது. இதன்காரணமாக, பயிற்சி காவலர்களுக்கு, சிறப்பாக பயிற்சி அளித்த,”பயிற்சி பள்ளியின், துணை முதல்வர்” ஆன, “துணை காவல் கண்காணிப்பாளர்” சுப்பிரமணியன், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 9-ஆவது அணி, ‘C’ நிறுமத்தை சேர்ந்த, “ஹவில்தார்” கருணாகரன்* மற்றும் \r\n\r\nசிவசுப்பிரமணியன் ஆகியோரை, “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” ப.சரவணன், இன்று (அக்டோபர்.25) பாளையங்கோட்டை, “மிலிட்டரிலைன்” பகுதியில் உள்ள, தம்முடைய அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, பாராட்டி, பரிசு வழங்கினார்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் ” மேலப்பாளையம் ஹஸன்.
