சென்னை அப்பலோ மருத்துவமனை மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து ஸ்ட்ரோக் லெஸ் தின வாக்கத்தான் எனப்படும் நடைபயிற்சி நடைபெற்றது. \r\n\r\nசென்னை நுங்கம்பாக்கம் அப்போலோ மருத்துவமனையில் இருந்து துவங்கிய நடை பயிற்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து ???ொடங்கி வைத்தார். \r\n\r\nஇதில் அப்போலோ மருத்துவமனையின் செவிலியர்கள் மற்றும் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்,அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\r\n\r\nஇந்த வாக்கத்தான் நடைபயிற்சி லயோலா கல்லூரி அருகே நிறைவடைந்த்து .அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ் தாம் ஒரு விளையாட்டு வீரரும் கூட நடைபயிற்சியை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். \r\n\r\nமுன்னதாக வாத நோயில் இருந்து குணமடைந்த நோயாளிகளுக்கு மலர் செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.\r\n\r\n
