மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன விதி மீறல் தொடர்பான புதிய அபராதத் தொகை இன்று (26ம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. \r\n\r\nஇந்நிலையில் செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட கார், ஆட்டோ அல்லது பைக்கை, ஓட்டுநர்கள் ரத்து செய்தால், அவர்களுக்கு ரூ50 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். \r\n\r\nபோக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கை பயணிகளால் பாராட்டப்பட்டது.
