காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(64).இவர் நேற்று இரவு காஞ்சிபுரத்திற்கு பணிநிமிர்த்தமாக வந்திருந்து மேற்கு ராஜவீதி பகுதியில் நடந்து சாலை கடக்க முற்ப்பட்ட போது அதிவேகமாக வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியின் மினி குப்பை லாரியானது முருகன் மீது மோதியது.\r\n\r\nஇதில் முருகன் நிகழ்விடத்திலேயை பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார்.\r\n\r\nஇது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த முருகனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\r\n\r\nமேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி காவல்துறையினர் மாநகராட்சி மினி ஓட்டுநரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்தத்தை கைது செய்து சிவகாஞ்சி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய மாநகராட்சியின் மினிலாரியும் பறிமுதல் செய்தனர்.\r\n\r\nஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லுகார தெரு பகுதியில் எதிர்மறையாக வந்த மாநகராட்சி குப்பை ட்ராக்டரால் பெண் ஒருவர் லாரி மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.\r\n\r\nCCTV FOOTAGE சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.\r\n\r\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்.
