கும்பகோணம் அருகே ஆடுதுறை அடுத்துள்ள துகிலி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராமு மகன் ராஜா (42) ஓட்டுனராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் இந்நிலையில் இன்று இவர் வீட்டிலிருந்து கும்பகோனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் ராமமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் சென்றபோது முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்றார்\r\nஅப்போது எதிரே கும்பகோணத்திலிருந்து இருசக்கர வாகன ஓட்டி வந்த ராஜலக்ஷ்மி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. \r\n\r\nஇதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜாவுக்கு பின்னால் தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜலட்சுமி மற்றும் பின்னால் உட்கார்ந்து வந்த மகள் திவ்யா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். \r\n\r\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவின் மகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
