கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் இந்நிலையில் கூட்ட நெரிசலில் பாலக்கரையிலிருந்து செட்டி மண்டபம் வரை 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அதி வேகத்தில் மோதிவிட்டு சென்ற காரை செட்டிமண்டபத்தில் பொதுமக்கள் காரை மற்றும் கார் ஓட்டுநரை மடக்கி பிடித்தனர். \r\n\r\nஇதுகுறித்து தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வருவதற்குள் கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுநர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும் யாருடைய சொகுசு கார் என்றும் விசாரணை நடத்தி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
