மக்கள் சேவையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று (29.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வி.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.\r\n\r\nபொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை 1922 ஆண்டு தொடங்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டு 100-ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, சுகாதாரத்துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கௌரவித்தல். விழிப்புணர்வு கலை நகிழ்ச்சிகள் நடத்துதல், மாவட்ட அளவில், வட்டார அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துதல் உள்ளிட்டவைகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. \r\n\r\nஅதன் நோய்த்தடுப்பு அலுவலர்கள், மாவட்ட ஒரு பகுதியாக, தேனி மருந்துத்துறையின் செவிலியர்கள், அளவிலான வைக்கப்பட்டது. கீழ் சுகாதார விளையாட்டுப் மாவட்டத்தில் பணிபுரிக்கூடிய ஆய்வாளர்கள், போட்டிகள் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை கொண்டு. இன்றைய தினம் தொடங்கி\r\n\r\nஅதன்படி. மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், கைப்பந்து, எறிபந்து, குண்டெறிதல், பேட்மிட்டன் கேரம் மற்றும் சதுரங்கப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\r\n\r\nஇந்நிகழ்வின் போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போக்ஸோ ராஜா, மருத்துவர்கள். மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\r\n\r\nவெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி.\r\n\r\nதேனி மாவட்ட செய்தியாளர் ஜீவா.
