அக்.24:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், “திசையன்விளை” அருகேயுள்ள, ஆத??தங்கரை பள்ளிவாசல், ஹசரத் செய்யது அலி பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா, ஹசரத் சேகு முகம்மது ஒலியுல்லா தர்கா, 2 நாட்கள் கந்தூரி விழா, இசுலாமிய மாதங்களுள் ஒன்றாகிய, ரபியூல் அவ்வல் மாதத்தின், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த கந்தூரி விழா, நேற்று (அக்டோபர்.23) அதிகாலையில், கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. \r\n\r\nகந்தூரி விழாவின், தொடக்க நிகழ்வாக, “கத்முல் குர்ஆன்” ஓதப்பட்டு, “குர்ஆன் தமாம்” செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, “அரண்மனை புலிமான்குளம்” கிராமத்தில் இருந்து, தர்காவின் “பரம்பரை அக்தார்” எச்.ஹபீபுர் ரகுமான் பிஜிலி, கொடி மற்றும் சந்தனக்குடம் ஆகியவற்றை, யானை மீது வைத்து, ஊர்வலமாக, தர்காவுக்கு கொண்டு வந்தார். \r\n\r\nஊர்வலம் வந்த வழியில், “ராமன்குடி முத்துக்கிருஷ்ணாபுரம்” கிராமத்தில், அருள்துரை நாடார் வீட்டில், அவருடைய குடும்பத்தினரால், ஊர்வலத்துக்கு “பாரம்பரிய” முறைப்படி, மங்கல “வரவேற்பு” அளிக்கப்பட்டது. \r\n\r\nஅப்போது குழுமியிருந்த அவ்வூர் மக்கள், சாதி, மத, இன பேதமின்றி, தர்காவுக்கு, “காணிக்கைகள்” கொடுத்ததுடன், ஊர்வலத்தில் வந்த அனைவருக்கும், தேநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கியும், கண்ணியப்படுத்தினர்.”பாரம்பரிய முறையிலான, “வரவேற்பு சடங்குகள்” முடிந்தவுடன், அங்கிருந்து புறப்பட்ட “கொடி ஊர்வலம்”, ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவை, வந்தடைந்தது. \r\n\r\nஅங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான, ஆண்- பெண் பக்தர்கள், பக்திப்பெருக்குடன், “வரவேற்பு” அளித்தனர். வரவேற்பினை தொடர்ந்து, தர்காவில் உள்ள “மினரா”வில், “கொடி” ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த அனைவரும், “நாரே தக்பீர்! அல்லாஹூ அக்பர்!” என்று, பக்தி கோஷமிட்டனர். \r\n\r\nபின்னர், தர்கா “ரவ்லா ஷரீப்” மீது, “சந்தனம்” மெழுகும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில், “மவ்லூது ஷரீப்” ஓதப்பட்டது. “ராத்தீபு” நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவில், “பக்தி சொற்பொழிவு” மற்றும் “பாட்டு கச்சேரி” ஆகியன நிகழ்ந்தன. இன்று (அக்டோபர்.24) அதிகாலையில், உலக நன்மைக்காக,”அபூர்வ துஆ” ஓதப்பட்டு, “நேர்ச்சை விநியோகம்” செய்யப்பட்டது. \r\n\r\nஅத்துடன், “கந்தூரி விழா” நிறைவு பெற்றது. கந்தூரி விழாவில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து, திரளான ஆண், பெண் பக்தர்கள், பக்கேற்றிருந்தனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
