Saturday, December 6, 2025
Homeமத்திய அரசின், இந்தித்திணிப்பை எதிர்த்து, திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்! ...

மத்திய அரசின், இந்தித்திணிப்பை எதிர்த்து, திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி,அக்.26:- இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க முயற்சி செய்கின்ற, மத்திய அரசைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் பங்கேற்ற, “கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்” இன்று (அக்டோபர்.26) காலையில், திருநெல்வேலி- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில், “ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்” முன்பாக நடைபெற்றது. \r\n\r\n”நெல்லை வழக்குரைஞர்கள் தமிழ்மன்றம்” சார்பாக நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, “தமிழ் மன்றத்தலைவர்” வழக்கறிஞர் மணிகண்டன், தலைமை வகித்தார். “நெல்லை வழக்கறிஞர்கள் சங்க, முன்னாள் செயலாளர்” செந்தில்குமார், “வழக்கறிஞர்கள்” எம்.எஸ்.சுதர்சன், பேச்சிமுத்து, மீரான் முகைதீன், சந்திர சேகர், மகேஷ், இசக்கிப்பாண்டி, \r\n\r\nரமேஷ், “வழக்கறிஞர்கள் சங்க துணைச்செயலாளர்” பாசறை பரமசிவன், அப்துல் ஜப்பார்,அருள்ராஜா “திமுக வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர்” சுப்பிரமணியன் உட்பட பலர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக “கோஷம்” போட்டனர். \r\n\r\nகல்வி நிறுவனங்களில், இந்தி மொழியானது கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்! என்னும் திட்டத்தை, கைவிட வேண்டும். நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்!- ஆகிய கோரிக்கைகளை வலியுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments