கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் அப்பு என்கின்ற வினோத்குமார் (24). இவர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வியாபாரியாக உள்ளார்.\r\n\r\nஇந்நிலையில் இன்று மாலை வினோத்குமார் புதிய நகர பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கிருந்து வந்த மினி பேருந்து ஓட்டுநரான, தாராசுரத்தை, சேர்ந்த வளையப்பேட்டையைச் சேர்ந்த தீனா என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. \r\n\r\nஇதனால் ஆத்திரம் அடைந்த தீனா, வினோத்குமாரை ஓங்கி கையால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே வினோத் குமார் உயிரிழந்தார்.\r\n\r\nஇது குறித்து மேற்கு காவல் துறையினர், வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
