Theni Periyakulam District News
\n
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மேல்மங்கலம் கள்ளுக்கட்டு பகுதியில் சார்பு ஆய்வாளர் முருகப்பெருமாள் உள்ளிட்ட காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர்.
\n
அப்பொழுது பெரியகுளம் நோக்கி சென்ற ஆட்டோவை சோதனை செய்த பொழுது ஆட்டோவில் இருந்த நபர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
\n
இதனைத் தொடர்ந்து ஆட்டோவை முழுமையாக சோதனை செய்ததில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
\n
\n
Periyakulam – Jayamanglam District News Today
\n
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த ஆட்டோவில் பயணித்த ஜெயமங்களம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், வீரனேஸ்வரன், பிரகதீஷ், பிரபு ஆகிய 4 நபர்களையும் கைது செய்ததோடு
\n
மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
\n
மேலும் நாட்டு வெடிகுண்டுகளுடன் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கியு பிரிவு காவல் துறையினரும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
\n
ALSO READ | திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா
\n
\n
\n
இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் வந்தவர்கள் யாரையும் பழி தீர்க்க வந்தார்களா? அல்லது கூலிப்படையாக செயல்படுகிறார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
\n
மேலும் நாட்டு வெடிகுண்டுகளுடன் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சேமங்கலம் பகுதியில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
\n
\n
\n

\n