இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் காட்டன் சூதாட்டம் மூலமாக பண ஆசைகாட்டி பலரை மோசடி செய்த தாக வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
\n
இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
\n
\n
\n
\n
\n
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆற்காடு காதர் ஜண்டா தெரு வை சேர்ந்த சம்க அலியார் என்பவர் அப்பாவிகளிடம் சிலர் பண ஆசைகாட்டி காட்டன் சூதாட்டம் விளையாட வைத்து மோசடி செய்து வருவதாக ஆற்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில்
\n
குற்றவாளியான மௌலாபாஷா கண்டறியப்பட்டு தேடியதில் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் புளிய மரம் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பெட்டி கடை அருகே சோதனை செய்ததில் அங்கு பதுங்கி இருந்த மௌலாபாஷா (வயது49) கையும் களவுமாகப் போலீசாரிடம் பிடிபட்டார்.
\n
ALSO READ | கும்பகோணத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிச்சலாக காணப்படும் நெடுஞ்சாலையில் 4 அடிக்கு சாலை உள்வாங்கியதால் பரபரப்பு.
\n
\n
\n
மேலும் அவர் காட்டன் சூதாட்டத்திற்கு பயன் படுத்தப்பட்ட சீட்டுகள்மற்றும் ரூபாய் 250 பறிமுதல் செய்யப்பட்டது.
\n
இதனையடுத்து போலிசார் மெளலா பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
\n
\n
\n

\n