Thursday, December 18, 2025
Homeதிருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா

திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா

திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெறுகிறது.

\n

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது.

\n

\n

அதன் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார்.

\n

அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

\n

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.

\n

\n

பின்னர் மகா தீபாராதனையாகி, கிரி வீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறார்.

\n

திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக வருகின்ற 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments