Thursday, December 18, 2025
Homeபொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர்.

\n

குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர். 

\n

\n

அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர் இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் தொழுகை செய்து வருகின்றனர்

\n

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மழை வேண்டி கூல் பிரெண்ட்ஸ் நண்பர்கள் சார்பில் இஸ்லாமியர்கள் கைகளை திருப்பி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு போக்கிட வேண்டும்

\n

தொடர்ந்து மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments