Thursday, December 18, 2025
Homeகாலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ ராம் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

\n

மேலும் ஸ்ரீ ராம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளான கால்வாய் வசதி, சாலை வசதி, தற்போது கோடை காலத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி சார்பில் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது.

\n

\n

மேலும் இது சம்மந்தமாக அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திடிரென ஆரணி திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

\n

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்ய முயன்ற போது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டடன.

\n

\n

இதனையடுத்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம், கழிவுநீர் பக்க கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

\n

அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றன.

\n

\n

\n

\n

\n

\n

 

\n

\n

\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments