Alagappa University Evening College Thondi Tamil Nadu
\n
இராமநாதபுரம் தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கலை அறிவியல் கல்லூரி வரும் கல்வி ஆண்டில் தொடங்கப்பட உள்ளது
\n
அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் துறை சுற்றுலா மேம்பாட்டுத்துறை செயல்பட்டு வருகிறது
\n
ஏற்கனவே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மாலை நேர கல்லூரி செயல்பட்டு வந்தது கடந்த சில ஆண்டுகளாக மாலை நேர கல்லூரி செயல்படவில்லை
\n
\n
\n
\n
\n
இங்கு மாலை நேர கல்லூரி செயல்பட்டுவந்த காலத்தில் இப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரங்களில் கல்லூரிக்கு சென்று பட்டப் படிப்புகள் படித்து வந்னர்
\n
குறிப்பாக இப் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் மாலை நேர கல்லூரியில் படித்தனர்
\n
இந்நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மீண்டும் இங்கு கலை அறிவியல் கல்லூரியை வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த உள்ளது
\n
ALSO READ | வேதாரண்யம் பகுதிகளில் கோடை வெயில் தாக்கத்தால் தர்பூசணி சாகுபடி பாதிப்பு.
\n
\n
\n
அதில் பி.ஏ. தமிழ் ஆங்கிலம் பி.பி.ஏ, பி.எஸ்சி கணிதவியல், பி.காம் சி.ஏ. பி.எஸ்சி ???ணனி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் முதல் கட்டமாக தொடங்கப்பட உள்ளது
\n
Thondi Alagappa University Application Form 2024
\n
கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் வழங்கப்படும் விண்ணப்க் கட்டணம் ரூ.75 எஸ்.சி எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்ப படிவத்திற் கான கட்டணம் ஏதும் இல்லை
\n
\n
\n
\n
\n
அதற்கான சாதி சான்றிதழை மாணவர்கள் வழங்க வேண்டும் மேலும் இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர் ஷிப் கட்டண சலுகை அரசின் விதிகளின்படி வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
\n
தொண்டியில் மீண்டும் அழகப்பா பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி செயல்பட உள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
\n
\n
\n

\n