Saturday, December 6, 2025
Homeகுமரி தண்ணீர் வசதி இல்லாத அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் அவல நிலை.

குமரி தண்ணீர் வசதி இல்லாத அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் அவல நிலை.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் பலதரப்பட்ட நோயாளிகள் உள்ளனர்.

\n

அவர்களில் பலர் பல நாட்களாக உள் நோயாளிகளாக தங்கி கை, கால்கள் பாதிக்கப்பட்டும், பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான முதியோர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

\n

\n

இவர்கள் அனைவருக்கும் அவர்கள் தங்கி இருக்கும் வார்டுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வினியோகம் கழிவறைகளுக்கு நேரடியாக கிடைக்கப்பெறாததால்; நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக உதவி புரிவதற்காக உள்ள அட்டெண்டர்கள் மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் நீரினை எடுத்து கழிவறை வரை எடுத்து சென்றால் மட்டுமே உபயோகிக்க இயலும் என்ற நிலை உள்ளது.

\n

\n

மாவட்ட நிர்வாகமும் சுகாதார துறையும் இதனை கவனத்தில் கொண்டு கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் அனைத்து கழிவறைகளுக்கும் நேரடியாக தண்ணீர் விநியோகம் கிடைக்க உத்தரவிடும் பட்சத்தில் இங்குள்ள அனைத்து நோயாளிகளும் பயனடைவார்கள்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments