நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் அருகே நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.
\n
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் ரூ.360 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
\n
\n
\n
\n
\n
இதன்பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கியது.
\n
இதற்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தற்காலிகமாக செயல்பட்டது. ஆனால் அங்கு பெயரளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரி செயல்பட்டது.
\n
\n
\n
\n
\n
போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அனைத்து நோயாளிகளையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அல்லது தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கும் சூழ்நிலை நீடித்தது.
\n
மருத்துவக் கல்லூரிக்கான எந்த கட்டமைப்பும் இல்லாமலும் பல துறைக்கு மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
\n
ALSO READ | திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரை குடியிருப்புகளை அகற்ற கணக்கெடுப்பு குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு.
\n
\n
\n
இந்த நிலையில் ஒரத்தூர் கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 4ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு,க. ஸ்டாரின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.
\n
இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத போதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவம் பயின்று வந்தனர். அதனைத் தொடர்ந்து சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்டவைகள் ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.
\n
\n
\n
\n
\n
இந்நிலையில் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிரிக்கு மாற்றப்பட்டது.
\n
வெளி நோயாளி பிரிவுகள், மகப்பேறு மட்டும் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
\n
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை அதே இடத்தில் இயங்க வேண்டும்.
\n
\n
\n
இதை விட்டு நாகப்பட்டினத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரத்தூர் கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என வெளிப்பாளையம் வர்த்தக சங்கம், மீனவர்கள், விவசாயிகள்,அரசியல் கட்சியினர் என 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பாக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
\n
ALSO READ | தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை.
\n
\n
\n
நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள காரணத்தால் விவசாயிகள் மீனவர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால் அவசர சிகிச்சை சேவை உள்ளிட்டவைகளை நாகை மருத்துவமனையில் செயல்படுத்த வேண்டும் என்பது நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
\n
\n
\n

\n