Saturday, December 6, 2025
Homeதூய்மை பணியாளர்களின் கைகளை கழுவி, சந்தனம் பூசி, குங்குமப் பூ இட்டு சிறப்பு செய்த ஆசிரியர்கள்...

தூய்மை பணியாளர்களின் கைகளை கழுவி, சந்தனம் பூசி, குங்குமப் பூ இட்டு சிறப்பு செய்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் கல்வியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

\n

இந்த நிலையில் கல்லூரியின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உழைப்பாளர்கள் தினத்தை கொண்டாடினர்.

\n

\n

இதில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.

\n

இதில் கலந்துகொண்ட துப்புரவு பணியாளர்களின் கைகளை கழுவி, சந்தனம் பூசி, குங்குமப்பூ இட்டு சால்வைகள் அணிவித்து ஆசிரியர்களும் மாணவிகளும் சிறப்பு செய்தனர்.

\n

\n

இந்தக் காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மில்டன் ராஜ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments