Saturday, December 6, 2025
Homeசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு உறவினரால் கொலை மிரட்டல்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு உறவினரால் கொலை மிரட்டல்.

சென்னை திருவொற்றியூர் மேட்டு தெரு 4வது தெருவில் வசித்து வருபவர் மதன் ராமு இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அரசு கூடுதல் அலுவலக வழக்கறிஞராகவும்  உள்ளார்.

\n

இந்நிலையில் குடும்ப சொத்து காரணமாக இவரது வீட்டுக்கு நேற்று அத்தை சாந்தி ராதா பெரியப்பா சுந்தரமூர்த்தி மற்றும் சித்தப்பா சண்முகம் ஆகியோர் தங்களுக்கும் வீட்டில் பங்கு உள்ளதாக தெரிவித்து அத்துமீறி வீட்டில் நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி வழக்கறிஞரின் தாய் சசிகலா மற்றும் தந்தை ராமு வழக்கறிஞர் மதன் ராமுவையும் ஆகியோரை தாக்கி உள்ளனர்

\n

\n

மேலும் ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக புது வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலிடம் புகார் அளித்துள்ளனர்

\n

அவரின் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் காவல் துறையினர் எதிர்த்தரப்பினரை விசாரணைக்கு வர தெரிவித்துள்ளனர்

\n

இந்நிலையில் வழக்கறிஞர் மதன் ராமு இன்றைக்கு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் தொடர்ந்து ஆங்காங்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது

\n

\n

சொத்து தகராறு தன்னுடைய உறவினர்களை கொலை மிரட்டல் விடுத்து குடும்பத்தாரை தாக்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

\n

மேலும் இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி காவல்துறைக்கு கோரிக்கை வைத்து பத்திரிகையாளரிடம் பேட்டி அளித்தார்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments