தேனி மாவட்டம் சின்னமனூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
\n
அப்பொழுது சின்னமனூர் காந்தி நகர் காலனியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பெயரில் ஒரு வீட்டில் சோதனையிட்டதில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள கணேஷ் புகையிலை கூலிப் டோப்பக்கோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
\n
\n
\n
\n
\n
வீட்டின் உரிமையாளரான பாலமுருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
\n
அதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்.
\n
தேனி மாவட்டம் சின்னமனூர் கண்ணம்மா கார்டன் அருகே சின்னமனூர் வழியாக வந்த TN 25 AF 38 76 என்ற ஆட்டோவில் சுமார் 300 மதுபான பாட்டில்கள் சாக்கு பையில் கொண்டு வந்ததை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர்.
\n
ALSO READ | இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து, காசாவிற்கு கூடுதல் உதவிகளை செய்ய பிளிங்கன் வலியுறுத்தினார்.
\n
\n
\n
ஆட்டோவை ஓட்டிச் சென்றவர் மகேந்திரன் சின்னமனூர் காந்திநகர் காலனி சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
\n
அவரிடமிருந்து 300 மதுபான பாட்டிலை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
\n
இந்த இரு குற்றச் நிகழ்வுகளும் அரசு விடுமுறை நாளான இன்று நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
\n
\n
\n

\n