Saturday, December 6, 2025
Homeஅரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.

அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அப்பகுதியில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

\n

இதில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் நீர்மட்டம் குறைந்ததாகவும் மேலும் இன்னொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேரும் சகதியும் ஆகவும் குடிநீர் வந்துள்ளது.

\n

\n

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள தர்ம சமுத்திரம் கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் உள்ளது

\n

அப்பகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கே குடிக்க குடிநீர் இல்லை இங்கு தண்ணீர் எடுக்க வராதீர்கள் என கூறியதாக கூறப்படுகிறது. 

\n

\n

இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என்று தெரியாத பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காடுவெட்டி – ஆண்டிமடம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

\n

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வேல்முருகன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

\n

இதனால் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments