Saturday, December 6, 2025
Homeமறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் 31 வது சிரார்த்த தின நிகழ்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் 31 வது சிரார்த்த தின நிகழ்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்களின் 31 வது சிரார்த்த தின நிகழ்வு இன்று காலை கொழும்பு 12 புதுக்கடை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் பிரேமதாசா வின் புதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா தலைமையில் இடம் பெற்றது.

\n

\n

இதன் போது திருமதி பிரேமதாசா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் மதத் தலைவர்கள் பொதுமக்கள் எ??ப் பலர் கலந்து கொண்டனர்.

\n

 

\n

\n

நான்கு மத சமயத் தலைவர்களின் சமயப் பிரார்த்தனைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் பிரேமதாஸவின் புதல்வர் சஜித் பிரேமதாஸ அவரது தந்தை மக்களுக்கு ஆற்றிய சேவைகள் அவரின் அரசியல் செயற்பாடுகள் மக்களுடன் அவர் கொண்டிருந்தன நல்லுறவுகள் தொர்பாகவும் உரையாற்றினார்.

\n

\n

இதன் போது மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்களின் உருவச் சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்டவர்களால் மலர் மாலை அனுவிக்கப்பட்டது டன் திருமதி பிரேமதாசா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பிரமுகர்களாலும் சிலைக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments