Saturday, December 6, 2025
Homeசிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில்nஅட்டாளைச்சேனையில் மே தினக்கொண்டாட்டம்

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில்\nஅட்டாளைச்சேனையில் மே தினக்கொண்டாட்டம்

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டம் அட்டாளச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. 

\n

\n

போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், விசேட அதிதியாக அக்கரைப்பற்று ஹல்வானி பேக்கரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.ஏ.எம்.சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

\n

\n

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனை மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பயன்தரும் மரங்கள், கற்றாளைக்கன்றுகளும் சகலருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments