சிறந்த விவசாய பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (30/04/2024) நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
\n
ALSO READ | ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக செயற்ப்பட வேண்டும்
\n
\n
\n
மிக குறுகிய காலத்திற்குள் சிறந்த விவசாய பயிற்சி ( GOOD AGRICULTURE PRACTICES) திட்டத்திற்குள் 2000 விவசாயிகளை உள்வாங்கியமை மிகச்சிறப்பான செயற்பாடென கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார். நவீன விவசாய பொறிமுறை தொடர்பான அறிவை இந்த திட்டத்தினூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
\n
\n
\n
\n
\n
\n
விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாக காணப்பட வேண்டும் எனவும், இதற்காக மத்திய, மாகாண அமைசுக்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைத்து செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
\n
ALSO READ | கல்குடா யானைக்கல் கடலில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
\n
\n
\n
விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பேசப்படுவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அனைவரும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். அந்தவகையில் சாமானிய பொது மகன் ஒருவர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் கௌரவ கூறியுள்ளார்.
\n

\n
ALSO READ | ரணில்-சஜித் கூட்டு ஒருபோதும் ஏற்படாது” – திஸ்ஸ அத்தநாயக்க
\n
\n
\n
பொதுமக்களுக்கான நிலையான மற்றும் சிறந்த சேவையினை வழங்க ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் இவ்வாறான செயற்பாடுகளை அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
