Saturday, December 6, 2025
Homeதிருச்சியில் ரவுடி வெட்டி படுகொலை பழிக்குப் பழியாக தொடரும் கொலைகள்.

திருச்சியில் ரவுடி வெட்டி படுகொலை பழிக்குப் பழியாக தொடரும் கொலைகள்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி. அவரது மறைவிக்கு பிறகு இவரது தம்பி கேபிள் சேகர் பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.

\n

கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

\n

இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன் மேலும், அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

\n

\n

இந்த கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது.

\n

இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(35) அரியமங்கலம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

\n

இந்த கொலை தொடர்பாக அரிமயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். 

\n

\n

இந்நிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துகுமார்(28), சரவணன்(28) மற்றும் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(19), கோபிநாத்(20) ஆகியோர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் 4பேர் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

\n

இந்நிலையில் இன்று காலை தஞ்சை சாலையில் உள்ள எஸ்ஐடி பகுதியில் உள்ள டீ கடையில் முத்துகுமார் டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்க வந்த 2 பேர் முத்துகுமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். 

\n

\n

இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

\n

மேலும் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இரண்டு பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

\n

\n

சிலம்பரசன் கொலை சம்பவத்திற்கு பழிக்குபழியாக ரவுடி முத்துகுமார், கொலை செய்யபப்ட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

\n

பட்டப்பகலில் ஆயிரக்கணக்கானோர் சென்றிருக்கும் தஞ்சை சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments