துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
\n
அப்போது சந்தேகத்து இடமாக நடந்து கொண்ட ஆண் பயணியை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதில் அவர் உடலில் மறைத்து 1039 கிராம் தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது.
\n
\n
\n
\n
\n
இதனைத் தொடர்ந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.74.91 லட்சம் என்று அதிகாரி தெரிவிக்கின்றனர்.
\n
தொடர்ந்து அந்தப் பையனிடம் அதிகாரிகள் தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
\n
\n
\n

\n