அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்கும் ஹலால்தீன் ஐனி பதூல் வெற்றி பெற்று சர்வதேச மட்டப்போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
\n
ALSO READ | ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக அரசு நடத்திட வேண்டும் – மாநில பொது செயலாளர் முனைவர் பேட்ரிக் ரெய்மாண்ட பேட்டி
\n
\n
\n
அல்ஹாஜ் எம்.எம்.எம்.ஹலால்தீன், ..தம்பதிகளின் புதல்வியான இவர், கடந்த 20.04.2024 ஆந்திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்டப்போட்டியில் வெற்றிபெற்று சர்வதேசப்போட்டியில் பங்குபெறும் வாய்ப்பிபைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
\n
இது தொடர்பில் மாணவியின் தந்தை குறிப்பிடுகையில்,
\n
\n
\n
\n
\n
தனது மகளின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று ஊக்கமளித்த பாடசாலை அதிபர் ஏ.ஜே.மர்சூக் (SLAES), கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக பிரத்தியேகமாக சிறப்புப்பயிற்சிகளை வழங்கி ஊக்கமளித்த எகோ தனியார் கல்வி நிலைய உரிமையாளர், கணித ஒலிம்பியாட் பயிற்றுவிப்பாளர் எம்.எம்.நவாஸ் ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
\n
\n
\n
அத்துடன், விஷேடமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மாணவர்கள் கல்வி ரீதியில் இவ்வாறான சிறந்த அடைவு மட்டத்தைப் பெறுவதற்கும் தேசிய, சர்வதேச சாதனைகளை நிகழ்த்துவதற்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உருவாக்கம் காரணமாகத் திகழ்வது மறுக்க முடியாத உண்மையாகும்.
\n
அதனடிப்படையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்காக இக்கல்வி வலயத்தைப்பெற்றுத்தந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி, பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
\n
ALSO READ | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
\n
\n
\n
