Saturday, December 6, 2025
Homeகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  சகீலா இஸ்ஸடீன்  பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

\n

\n

பனங்கடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம்.சகீல் அவர்களின் அழைப்பினை ஏற்று அங்கு விஜயம் மேற்கொண்ட பணிப்பாளர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதிகள் உள்ளிட்ட ஏனைய பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

\n

\n

\n

அதனைத் தொடர்ந்து அவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாடிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் அவற்றினை நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

\n

\n

\n

இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.ஏ.சி.மாஹிர், டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ். ஷாபி, பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அப்துல் கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

\n

இதன்போது பணிப்பாளர் அவர்களினால் வைத்தியசாலை வளாகத்தில் மரம் ஒன்றும் நடப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments