முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
\n
\n
முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்துள்ளது.
\n
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் சிலரிடம் ஆசை வார்த்தை கூறி உயர்கல்வித்துறை முக்கியஸ்தர்களுக்கு பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
\n
ALSO READ | சிகிச்சைக்கு வந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடித்துக் கொண்ட வீடியோ வைரல்
\n
\n
\n
இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
\n
\n
\n

\n