Saturday, December 6, 2025
Homeஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு கண்காணிப்பு கேமரா பழுது.

ஈரோட்டில் மின்னணு வாக்குப்பதிவு கண்காணிப்பு கேமரா பழுது.

ஈரோடு: சித்தோடு ஐ. ஆர். டி. டி பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா பழுது ஏற்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது.

\n

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 220க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு ஸ்ராங் ரூமில் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரே கண்காணிப்பு கேமரா பழுது ஏற்பட்டுள்ளது. பின்னர் அது உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது.

\n

\n

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சித்தோட்டில் ஐ. ஆர். டி. டி பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

\n

மேலும் பாதுகாப்பு காரணமாக நேற்று முதல் அப்பகுதியில் டிரோன்கள் பறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments