Saturday, December 6, 2025
Homeஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோட்டில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம் பால்காவடி பன்னீர் காவடி அழகு காவடி ரத காவடிகள் எடுத்தும் மாவிளக்கு போட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

\n

இன்று மாலை பக்தர்கள் தங்கள் கன்னத்தில் அலகு குத்தி கொண்டு காவடிஎடுத்தும் ரத காவடி எடுத்து நடனத்துடன் தெரு வீதிகளை கடந்து வந்து மேலும் ஆலயத்தை நடனத்துடன் வலம் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

\n

\n

அதன் பிறகு இரவு ஆகாச மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்க பட்டு பக்தர்களுக்கு அருட் பிரசாதங்கள் மற்றும் அன்னதான பிரசாதங்கள் வழங்கி இரவு ஆர்க்கெஸ்ட்ரா எனும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

\n

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இன்னிசை நிகழ்ச்சி களை கண்டுகளித்தனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments