Saturday, December 6, 2025
Homeசிகிச்சைக்கு வந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடித்துக் கொண்ட வீடியோ வைரல் 

சிகிச்சைக்கு வந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடித்துக் கொண்ட வீடியோ வைரல் 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.

\n

இந்த சுகாதார நிலையத்தில் அருகில் உள்ள பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தரப்பினர் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு மற்றும் அடிதடியில் காயங்களுடன் சிகிச்சைக்காக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டனர்.

\n

\n

அப்போது அவர்களுக்குள் மீண்டும் திடீரென்று தகராறு ஏற்படவே இரண்டு தரப்பினருக்குள்ளும் அடிதடி ஏற்பட்டது. இதனை அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி உள்ளது.

\n

\n

சம்பவம் குறித்து தகவலின் பேரில் வந்த சோழத்தரம் போலீசார் இரண்டு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

\n

\n

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளே சிகிச்சைக்கு வந்தவர்கள் அடித்துக் கொண்டதால் அங்கு பணியாற்றி வரும் செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 

\n

இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

\n

\n

\n

அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே இந்த சம்பவம் உணர்த்துவதாக தெரிவித்து வருகின்றனர்.

\n

\n

காவல்துறை இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments