கும்பகோணம் அருகே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. \r\n\r\nமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார் , இதனைத் தொடர்ந்து சண்முகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .\r\n\r\nதொடர்ந்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு யாகம் நடைபெற்றது 108 சங்காபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .\r\n\r\nதொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
